ஆதவனே ஆட்சி
அண்டமே உன்னாலே ஆட்சி
அசரவைக்கும் ஒளியின் காட்சி
அவனியே அதற்கு சாட்சி
அனலாய் கொதிக்கும் நீட்சி
பல நாமங்களை கொண்டுள்ளாய்
பயன்பாடு பலவற்றுள் பங்களிப்பாய்
பகுதிகளிடை கடும் குளிர்சியாய்
இருளாகவும் காட்சி தருகிறாய்
பூமிக்கு அருகிலே விண்மீனாய்
புவியின் விட்டத்தைவிட அதிகமாய்
பக்கமே நெருங்க முடியாதவனாய்
படைப்பிலே நிலவும் துணையாய்
கோடை வந்தாலே மக்கள் கூட்டம்
கொழுத்தும் வெய்யிலும் கடற்கரை நாட்டம்
அழகின் ஒளியாய் அனைத்திலும் இருப்பாய்
அன்றாட வாழ்விற்கு அவசிமாகிறாயே