வியாழன் கவிதை

Selvi Nithianandan

அதனிலும் அரிது (509)
உலக நலவாழ்வு மையமே
உலகுக்கு உன்னதமாய்
அறிவித்த நாளுமாய் வந்ததே
உலக சுகாதார நாளாகும்

உயிர்களின் பாதுகாப்பிற்காய்
ஒன்றுபட்டு உழைத்திடல்
சுற்றுச்சூழல் சுகாதாரத்தை
சுத்தமாகக் கடைப்பிடித்தல் நன்று

தாய்சேய் நலன் கருதியும்
தரணியில் பிள்ளைகளின்
எதிர்காலம் ஒளிமயமான
விடிவிற்காய் அமைத்திடல் சிறப்பு

மானிடப்பிறப்பு அரிது
அதனிலும் அரிது
ஒளவையின் வாக்கே
நோயற்று வாழ்வதே
குருதியை உறுதிப்படுத்துமே