இப்படியுமா
விந்தை உலகிலே
வியப்பான செய்தியும்
சிந்தை முழுதும்
சிதையும் மனிதமும்
விரைந்தோடும் விடியலும்
வரிசையிலே காத்திருப்பு
விலையில்லா உயிரும்
பலியாகும் நிலையில்
விநியோகப் பொருளும்
விலையேற்றம் கண்டு
வியாபாரக் கடையும்
விற்க்குதே உயர்வாய்
அத்திவசியப் பொருளும்
இரட்டிப்பு உயர்வு
அன்றாடப் பிழைப்பு
அச்சத்தால் இருப்பு