துளி நீர்
உயிர் வாழத் தேவையானதும்
உலகில் பெரும் பகுதியாகவும்
உடம்பிலே ஒட்டியே காணப்படுவதும்
உருவம் இல்லாத இருப்பாகும்
மனித வாழ்வின் ஆதாரம்
மழையாக பூமியை நனைப்பதும்
மண்ணிலே ஆறு குளம் கடலாவதும்
மருந்து தேவைக்கும் பயனாகும்
உயிர்கள் நிலைத்திருக் தேவையானதும்
பயிர்கள் வளர்ச்சிக்கு உபயோகமாகும்
மானிடரின் செயற்கை இயற்கை மாசுபடுவதாலே
சிக்கனமாய் பயன்படுத்தல் சாலவும் நன்றே