சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பணி
குளிரோ மழையோ ஓட்டம்
குடும்ப மாதந்த வேதனம்
கூடு சுற்றி சக்கரம்
கூட்டாய் காக்கும் சாதனம்

மகிழ்வாய் எப்போதும் செய்வதும்
மனம் இரங்கி மற்றவரை ஆதரிப்பதும்
பலபொருள் கொண்டதும்
பத்திரமாய் செய்வதும் பணியே

அடங்கும் வாழ்வும் ஆறடி
மண்ணுக்கு சொந்தம்
அகிலத்தில் உள்ளவரை
பணிசெய்து வாழ்வை முடி