வியாழன் கவிதை

Selvi Nithianandan

விலைவாசிஉயர்வு (506)

பொருளாதாரம் விழுந்துவிட்ட சரிவு
பொருட்களும் போட்டியாய் உயர்வு
பதுக்கலாய் பலபொருட்கள்இருப்பு
பக்குவமாய் விற்பனையில் சிறப்பு

எரிபொருள் நாளாந்த ஏற்றம்
எல்லாமே இப்போ மாற்றம்
எச்சரிக்கையாய் மின்வெட்டுத் திட்டம்
எண்ணிக்கை பிரகாரச் சட்டம்

அத்தியாவசியதேவைக்காய் காத்திருப்பு
அன்றாட விலையியில்வரிசையாய் நிற்ப்பு
அப்பாவி மக்களைஇப்படியாய் வதைப்பு
அடக்கி ஆழ்வதில் ஆட்சியின் துடிப்பு

கூலிப் பிழைப்பு இல்லாப் பாதிப்பு
கூட்டமாய் பலரும் ஆர்ப்பாட்ட வெடிப்பு
தினம் தினமாய் வலியுடன் காத்திருப்பு
சினத்தோடு மக்கள் வெளிக்காட்டும் வேதனையே