சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

சாதனை
சாதனைகள் பலபடைத்த எம்மினம்
சோதனையாய் குறிவைத்து தாக்கினம்
போதனைகள் பலதை மெருகேற்றி
வேதனைகயாய் கூறியல்லா உடைக்கினம்

நாடுகாத்து காடுகாத்து செய்துவிட்ட சரிதம்
நாதியற்ற பேச்சால் வந்துவிடும் விசமம்
வீடுஇழந்து வாழ்விழந்து வாழும் சமூகம்
விதியின் பால்நொந்து வெந்து தஞ்சம்

ஏட்டில் உள்ள சாதனையாய் பலர்வாழ்வு
ரோட்டில் கூட மாறிவரும் நிகழ்வு
பாட்டில் கூட பொறித்துவிட்ட சேர்வு
நாட்டிலும் நல்தேர்வே சிறப்பான முடிவே