சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

வாழ்க பல்லாண்டாய்
சாதனைப் பெண்ணே
சரித்திரம் கொண்டீர்
போதனை அறிவுடையீர்
போற்றுகிறேன் சகோதரியாய்

பா முகத்தின் மணிமகுடம்
பாசத்திலே தேன்குடம்
பழகுவதில் தனிரகம்
பார்போற்ற வாழ்ந்திடுவீர்

அமுதவிழா கண்டுவிட்டீர்
ஆனந்தமாய் வாழ்ந்துடனும்
ஆற்றல் இன்னும் படைத்து
ஆர்வமுடன் இருந்திடனும்

பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகளுடன் உறவுகளுடன்
பிண்ணிப்பிணைந்து வாழும்காலம்
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் அக்கா

செல்வி நித்தியானந்தன்