வியாழன் கவிதை

Selvi Nithianandan

சுதந்திரமாமே 554
இந்துசமுத்திரத்தின் முத்தாய்
இயற்கை அழகின் சொத்தாய்
புன்னகையின் மக்களின் தேசமாய்
புவனத்தில் பலபெயர்களின் சேர்வாய்

எழுபத்தைந்து ஆண்டின் சரித்திரம்
எண்ணில் அடங்கா தரித்திரம்
எல்லையற்ற தீர்வின் பிளவுகள்
தொல்லையாய் ஆட்சியின் முடிவுகள்

போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயராய்
போட்டிபோட்ட ஆட்சி கொடுமையாய்
போரும் பிரிவினையும் நாள்தோறும்
போக்கற்றவர்களாய் பலரும் நாடெங்கும்

ஜனாதிபதிகளும் பலர் மாறியாச்சு
கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்தாச்சு
கோலாகலமாய் கொண்டாட்டம் கொண்டாடிட
கோன்மை எல்லோரும் மகிழ்வில் திண்டாட