சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

விருப்பு வெறுப்பாகுதே
அதிகாலை இருளில் எழுந்து
விடியலும் இருளாய் செல்லும்
அவனியில் மாற்றம் கண்டுவிட
அகமும் மகிழ்சியாய் பெருகும்

மாதம் ஒன்றை கடந்திட
மார்கழி குளிரும் பலரைத்தாக்க
வெண்பனியும் வந்தே செல்ல
பருவத்தின் மாற்றம் நோயாகும்

உலகப் பூமியில் மானிட தோற்றம்
உயிரின் மூச்சுக்குள் சிதறும் மாற்றம்
வைரசின் தாக்கம் மீண்டுமே உலகிலே
விடைகாண போட்டியில் வியக்கும்நாமும்