வியாழன் கவிதை

Selvi Nithianandan

நீரானாய் எனக்குள்ளும் 553
ஆகாரமாய் இரண்டறக் கலந்தாய்
ஆதாரமாய் விண்ணிலும் சேர்வாய்
அவனியிலே பெரும்பங்காய் இருப்பாய்
அனைத்து உயிர்களுக்கும் தேவையாய்

நீர்மம் வளிமம் திண்மம் மூன்றானாய்
நதிகள் ஆறுகள் அருவிகள் சமுத்திரமாய்
கடல்கள் குளங்கள் ஓடைகள் ஏரிகளாய்
கால்வாய் குட்டை நன்னீர் கிணற்றடி நீரானாய்

ஐம்பூதங்களில் ஒன்றாய் பயிர்களுக்கு உயிரானாய்
நிறம் மற்றதாய் சுவையில் மாறுபாடாய்
வெந்நீராய் குளிராய் பானமாய் விற்பனையாய்
தேவைக்கேற்ப நீரைஅருந்தி ஆரோக்கியம் பேணலாமே