சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

யோசி

சிறுவயதில் ஆனந்தம் ஒன்றே
சின்ன விடயத்திற்கும் எனக்குமட்டும்
என்ற பெருமையும் அன்றே
ஏற்றத்தாழ்வு அறியமுடியாத இன்றும்
ஏக்கம் எனக்குள் சிந்திக்கவைத்ததே

எண்ணங்கள் கருத்துக்கள் முரணாகும்போது
ஏட்டிக்கு போட்டியாய் சிதைவுறும்வேளை
கூட்டுவாழ்வு பிளவுபட்ட போது
கூடிய சொந்தங்கள் பிரிந்து செல்ல
தனிமரமாய் தவித்ததை யோசிக்கவைத்ததே

பணம் என்ற மாயவலைக்குள் இன்றும்
குணம் மறந்தே குற்றங்களை மறைப்பாய்
குதூகலமாய் இருக்க உறவுகளைதேடியே
குவலயத்தில் பலரின் வாழ்வு கேள்வியாய்
மீட்டுப் பார்க்கையில் மீளவும்
வெற்றுக் கடதாசி போல்செல்லுதே