வியாழன் கவிதை

Selvi Nithianandan

பெருகிடும் வலிமை பெற்றுயிர தடையேது

மானிரடாய் பிறத்தல் சிறப்பு
மகிழ்ச்சியாய் வாழ்வது பெருமை
அகமும் தூய்மை என்றிட்டால்
அவனியில் பெருகிடும் வலிமை

உலகப் பந்தில் நாமும்
உறவாடும் பல பரிணாமம்
உயிர்ப்பலி நிறைந்த மண்ணிலே
உயிரைபிடித்து வலிமை பெருக்கியே

புத்தாண்டும் புதுப்பொலிவுடன் பெருகிவர
புதியதொற்றாய் போட்டு எமைத்தாக்க
உளவலிமை முடியாது முடியாதுபோயிடவே
உணர்ந்தும் எழுந்து ஓடியேசென்றிட

மனமுடைந்துவிட்டா வந்திடும் பலதடையே
மனதார தூக்கியெறிந்து மகிழ்ச்சியைபெருக்கிடலாம்