விழிப்பு
கருவொன்று உருவாகி
தருவாகும் நிலையாகி
பழிகேளா சொல்லாகி
வழியாகி விழிப்போடு
அன்னை அணைப்பு
ஆனந்த கணிப்பு
ஆற்றல் பணிப்பு
ஆசுபடா விழிப்பு
விழிநீரில் கண்ணயர்ந்து
விடியலில் எனைமறந்து
விளக்கின் ஒளிசுடராய்
வழிமேல் விழிப்பு
செல்வி நித்தியானந்தன்