சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

புதிர்
வயலோரம் பூத்திடும் புதிராய்
வாஞ்சையாய் வரிசையாய் நின்றிடும்
வாயாரா மகிழ்திடுவர் உன்னை
வாரி அணைத்து எடுத்திடுவார்

மூளைக்கு வேலையாக அமைவதும்
வார்தையாய் கணக்காய் விடுகதையாய்
பல பரிணாமங்களை பெற்றதாய்
பலபுதிரான புதிராகும் உலகில்