உழைப்பே மேதினமாய்
மேதினியில் என்றும் வந்திடுவாய்
மேஒன்றாய் வந்து சென்றிடுவாய்
மேலோர் கீழோர் பாகுபாடாய்
மேன்மையாய் தொழிலில் இருப்பாய்
உழைப்பு என்றுமே மூலதனம்
உந்து சக்தியாய் சாதனம்
உயர்ந்து செல்லும் வேதனம்
உறுதியாய் நின்றிடும் ஆதனம்
உழைப்பு என்னும் பிழைப்பு
ஊக்கம் கொண்ட செழிப்பு
உவகை கண்ட பொறுப்பு
உன்னதம் அடையும் சிறப்பு