பழமைக்குள் பூக்கும் புதுமையாக
சிந்தும் சந்தமாக விரிந்த படலம்
இரண்டு நூறு ஆக்கிய வித்தகர்தாம்
ஏற்றிய அரங்கும் முனைப்பும் வாழ்க !
கருவரி எடுத்து கூட்டிய புலமை
பலவரி தொடுத்து காட்டிய சொந்தம்
அகவரி கோர்த்து ஈட்டிய சந்தம்
முகவரி கொடுத்து மூட்டிய பந்தம்
என்றும் வாழ்க …வாழ்கவே ….!
குறிகொண்ட எண்ணமும் நிலைத்து ஓங்கிட
நெறிகாட்டும் நெட்டுயர் வாழ்வும் ஓங்கிட
தடையற்ற வழிகாட்டல் தழைத்து ஓங்கிட
படைகொண்டு மேன்மை படர்ந்த பசுமை
நிலைத்து வாழ்கவே …..!
நன்றி வணக்கம் !