மண் போற்றும் குரவர்கள் …..
உறங்கா இதயங்களே உவமைக்கானதே உங்கள் வாழ்வே
இரங்கா நெஞ்சங்களால் ஈடில்லா மண்ணின் இழப்பே …
ஓரங்க நாடகமேடையில் வேடந்தாங்கிய ஒத்திகையே
வீரங்க வீச்சோடு மண்காக்க விழுமியங்கள் காத்து நிற்க
கொண்ட வாழ்வின் பரிகாரங்கள் சோகத் தவிப்பிலே ….
காலங்கள் மூன்றிலும் விழித்திருக்கும் மாவீரச்செல்வர்களே
ஓடாது ஒழியாது ஒப்புவித்த உங்கள் வீரம்
காவிய பாதையில் அணையா பெருவெளிச்சமே…..
விடுதலை வெளிச்சம் வீச்சுடன் பாய்ந்தோட
விதியும் சதியும் ஒன்றாக வீரமறவர்கள் ஆனீரே….
நினைவின் தூபிகள் துயிலும் இல்லம் வாழும் காலம்
மறவோம் மறவோம் ….மீண்டும் வருவீர் மீண்டும் வருவீர் மீளும் மண்ணில் விந்தைகள் பெருகிட
மண் போற்றும் குரவர்களாக…..
நன்றி வணக்கம்
சர்வேஸ்வரி …கதிரித்தம்பி