சந்தம் சிந்தும் கவிதை

Sarvi

பிறந்த மனை….

என் வாழ்வினை ஆரம்பித்த தெய்வீக மனை…
எல்லாமான பழமுதிர்ச்சோலை….ஏகானந்த
வாழ்வின் ஆரம்ப கூடம்…. அத்தியாயத்தின் தொடுபுள்ளி இதுவே….அங்கத்துவ ஆலோசகர் கூடமும் அதுவே…..எண்ணற்ற பக்கங்களை புரட்டி புரட்டி மகிழவைத்த மாடம்…மண்வாசனை நுகரவைத்த
கூடம்…..வண்ணக்கோலங்களை
வடிவமைத்த கூடம்….விடியலின் அழகை ரசிக்க…முக்கனிகளை சுவைக்க…மாட்டுத்தொழுவத்தில் மடிமேல் செம்பினில் பெத்தாச்சி கறந்த பாலின் நுரையழகு அழகினை ருசித்த பொழுதாக …பிறந்த மனை காலத்தால் அழியாத காவியமே…தத்துப்புலினிகள் கூட்டம் வேலியின் மேலே…கரைந்திடும் காகக் கூட்டம்…துள்ளிக் குதித்து மகிழும் கன்றுக்குட்டிகள்…
ஒன்றா இரண்டா இதயத்துடிப்பே பிறந்தமனை…சுழலும் மணிகாட்டியிலும்
பிறந்த மனை…அழியாத அழகான ஓவியங்களுடன்
வரலாற்றுக் காவியம்…

நன்றி வணக்கம்