வியாழன் கவிதை

pukalodu panam

02.05.24
கவி இலக்கம் -314
உருளும் பணம்

பலம் தெரிந்து காலம்
உடல் நலம் விசாரிக்கிறது
கோலம் புரிந்து கோவில்
தலம் கம்பளம் விரிக்கிறது

கொடுப்பது கோடிப் பணம்
தேடிய புலம் பெயர் மண்ணிலே
பாடிய கடுப்பது புகழ் ஏற்றுதே
சூடிய கருவறை சிரிக்கிறதே

ஓடி ஓடிப் பணம் உழைத்து
நாடி நரம்பு கழைத்து
வாடிய படியே இரவு பகல்-
வதைத்து நாடிய மாய ஞாலம்

ஆழமான பக்திப் பரவசமாம்
பாழாய்ப் போன பித்த தரிசனம்
கேளாமல் கூடும் தலைக்கனம்

இருப்பதைத் திரும்பத் திரும்ப
மனத் திருப்தி இல்லாது மாற்ற
அடித்து உடைத்துப் புதிதாக்கத்
துடிக்கும் புகழின் உச்சக் கட்டமே .