வியாழன் கவிதை

pon.tharma

வணக்கம்
வியாழன் கவி இலக்கம் -536-07.03.23
வாழ்ந்த நம் சுவடுகள் .
———————————–
அழகான வீடு ,அதன் ஓரம் கூடு .
அண்ணாந்து சுற்றிப் பார்த்தால் ,அதன் கூரை ஓடு .
அழகான குடும்பமொன்று ,அதிலும் பலபேரு .
ஆண்களுக்குள் போட்டி வந்தால் ,அப்ப அப்ப ,தகராறு .

நடுத்தரக் குடும்பமென்றால் ,உருப்பட வேண்டுமெல்லோ .
படித்த (நாம் )புத்தகமும் ,பங்காளிக்கே சொந்தமெல்லோ .
ஊரு உபாத்திமாரும் ,ஊக்கத்துக்காய் ,ஒத்து ஊதல் .
பேரு வாங்க வைக்க ,பெரும் தடியால் ,சாத்து வேண்டல் .

ஆடு ,மாடு ,கோழி என்று ,அவை வளர்த்த பாணிகளும்.
கூடிநின்று கூட்டாளிகள் ,பந்தடித்த காணிகளும் .
பதவி வகித்த ,பாடசாலைப் ,பசுமையான நினைவுகளும் .
பள்ளம் ,திட்டி ,(வாழ்க்கை ) ஏறி வந்து ,பரணில் ஏறி அமர்ந்ததுவும் .
வாழ்ந்த ….நம் …..சுவடுகள் …….
நாலு பணம் சேர்க்க முன்பே ,காலுக்குமே வந்த கட்டு .
நாணயத்தைப் பிடித்துத் தந்து ,ஓடச்சொல்லி ஒரு தட்டு ( காலில் ) .
வாழ்ந்த ………நம் ……..சுவடுகள் ,,,
பொன்.தர்மா