வியாழன் கவிதை

pon.tharma

வணக்கம் .
இது வியாழன் கவி இலக்கம் -535-28.02.23
நிமிர்வின் சுவடுகள் .
———————————-
நிமிர்வின் சுவடுகள் ,கூற , மறுக்குமா உதடுகள் .

அன்னையும் ,தந்தையும் ,ஆசானும் (எமை )
அகிலத்துக்கு அனுப்பிய ,பரம்பொருளும் .

ஆக்கமும் ,ஊக்கமும் ,எமக்கு அளித்து –
அனுதினம் அவஸ்தைகள் ,சிதறடித்து .

ஏழ்மையும் ,தாழ்மையும் ,மறக்க வைத்தார் .
ஏறிடும் ஏணியாய்த் ,தாமிருந்தார் .

அயர்ந்திடும் போதினில் ,அடித்துறுக்கி .
தொய்ந்திடும் வேளையில் ,காதில் முறுக்கி .

புதைந்திட்ட திறமைகட்கு ,பொடிவைத்து .
துறை எல்லாம் ,தூண்ஆக்கி ,நிற்கவைத்த .

ஒளி காட்டி உயர்த்தி வைத்த ,கண்மணிகள் .(அவை )
கரையில்லா ,வானத்தின் ,மின்மினிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா