வியாழன் கவிதை

pon.tharma

வணக்கம் ,
இது வியாழன் கவி நேரம் .
இல .530
பேசாமல் பேசும் உலக மொழி .
————————————————–
பெண்டிர் ,பிள்ளைகள் ,பெரியோராலும் பேசும் மொழி .
பேதமை இல்லாப் பேசி மகிழும் மொழி .-தன்

அசைவினில் ஆயிரம் அர்த்தங்கள் காட்டிடும் மொழி .
அடுத்தவர் காதிற்க்குக் கேட்காத தொனி .

ஆளுமை ,அர்த்தங்கள் ,நிறைந்திட்ட நற் செறிவு .
அசைவினில் அர்த்தங்கள் காட்டும் ,ஆழத்தின் புரிவு .

தேசங்கள் பல சென்றும் ,வீராப்பு நடை போடும் மொழி .-அது
பேசும் மொழியுடன் இணை நின்று ,தனை உயர்த்தியே காட்டி நிற்கும் நல் வழி.
பொன்.தர்மா.