Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

சீரற்ற வானிலை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரான்சின் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சில மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் எனவும், சில மாவட்டங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Cantal மற்றும் Doubs மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Drôme, Isère, Haute-Loire, Loire, Puy-de-Dôme, Allier, Saône-et-Loire, Jura, Ain, Rhône ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் எனவும், அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று திங்கட்கிழமை இரவு Gironde மாவட்டத்தின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவுன், அதன்போது பல வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.