Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

வெடிகுண்டு மழை பொழியும் ரஷ்யா!

உக்ரேன் அதன் கிழக்கு நகரான செவேரோடானட்ஸ்க்கில் முழுமையான சண்டை நிறுத்தம் தேவை என்று தெரிவித்துள்ளது.

அங்கிருக்கும் Azot ரசாயன ஆலையில் பொதுமக்கள் 538 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 38 பேர் பிள்ளைகள் என்று கூறப்படுகிறது.
வெடிகுண்டுத் தாக்குதலும் சண்டையும் இடைவிடாமல் தொடர்வதால் பொதுமக்கள் அங்கிருந்து தப்புவது மிக ஆபத்தானது
என்றார் லுஹான்ஸ்க் (Lugansk) ஆளுநர் சர்கி கேய்டெய் (Sergiy Gaiday).
முழுமையாகச் சண்டை நிறுத்தப்பட்டால் மட்டுமே ஆலையிலிருந்து மக்கள் வெளியேறலாம் என்று அவர் சொன்னார்.
லுஹான்ஸ்க் வட்டாரத்தின் ஆகப்பெரிய நகரம் செவேரோடானட்ஸ்க். அதில் ரஷ்யப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும், ரஷ்யத் தரப்பினர் இன்னமும் அந்நகரைக் கைப்பற்றவில்லை.