Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

வட அயர்லாந்தின் பள்ளி தொடக்கவயதை நெகிழச் செய்யும் மசோதா

வட அயர்லாந்தில் பள்ளி தொடக்க வயதை பின்னோக்கி நகர்த்துவதற்கான மசோதா ஆராயப்பட்டு வருகின்றது.பல ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் ஆறு அல்லது ஏழு வயதில் பாடசாலை தொடங்குகின்றார்கள்.ஆனால் வட அயர்லாந்தில் இங்கிலாந்து போலவே குழந்தைகள் தமது நான்காவது பிறந்த நாளின் பின்பு பள்ளியை செப்டெம்பரில் ஆரம்பிக்கின்றார்கள்.ஆயினும் வட அயர்லாந்தில் ஆகஸ்ட் 2 முதல் 31 வரை பிறந்த குழந்தைகள் வழக்கமாக தங்கள் ஐந்தாவது பிறந்த நாளின் பின் செப்ரெம்பரில் ஆரம்பிக்கின்றார்கள்.இவ் மசோதா ஏப்ரல் 1 முதல் ஜூலை 1 வரை பிறந்த குழந்தைகளிற்கு அதிக நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது .அதாவது அவர்களின் பெற்றோர் விரும்பினால் ஐந்து வயதில் கல்வியை ஆரம்பிக்கலாம்.குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களிற்கு இத்திட்டம் நன்மை பயக்கும் என்று கல்வி அமைச்சர் மைக்கல் மெக்கில்வீன் தெரிவித்துள்ளார்.