Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

யாழ்ப்பாணம் விமான நிலையம் தொடர்பில் மக்கள் அதிருப்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், விமான கட்டணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒருவழி பாதைக்கான விமான கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – திருச்சிக்கு இடையான ஒருவழி பயணத்திற்கான விமான கட்டணம் 40,000 ரூபாயாகும், சென்னை – யாழ்ப்பாணம் இடையே 50,000 ரூபாயாகவும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானக் கட்டணங்கள் பயணிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதால், பயணிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விமான பயணங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்படும்.
கொவிட்19 தொற்று காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட போது, ​​யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான கட்டணம் 26,000 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.