Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் கிரீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் 1849 ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தான் இருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை கைப்பற்றிய உடன் அவை இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 1850 ம்
ஆண்டு விக்டோரியா மகாராணியிடம் வழங்கப்பட்டது

105 காரட் மதிப்புள்ள கோஹினூர் வைரத்தின் தற்போதைய சர்வதேச மதிப்பின் படி சுமார் 140 முதல் 400 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த வைரத்தை மீட்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்