உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கு மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா மீது ரஷிய படையினர் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தினர். ஒடேசாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் மற்றும் ஒரு கிடங்கு மீதும் ஏழு ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
20.30: உக்ரைன் தலைநகர் கீவ்வில் மீண்டும் தூதரகத்தை ஜெர்மனி திறந்துள்ளது. ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தூதரகத்தை மீண்டும் திறந்து வைத்தார்.
