பிரதமர் Elisabeth Borne, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி இம்மனுவல் மக்ரோனிடம் கையளித்துள்ளதாக அறிய முடிகிறது.
பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தரப்பு அறுதிப் பெரும்பான்மை பெற தவறியுள்ளது. 577 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மையை பெற 289 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால் ஆளும் தரப்பு 245 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
இதனால் அரசாங்கத்தை கலைக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், பிரதமர் Elisabeth Borne தனது பதவி விலகல் கடிதத்தை மக்ரோனிடம் கையளித்ததாகவும், ஆனால் அவரது பதவி விலகல் கோரிக்கையை ஜனாதிபதி மக்ரோன் நிராகரித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
சற்று முன்னர் எலிசே (Élysée) மாளிகை இதனை அறிவித்துள்ளது.
