இலங்கையில் கடந்த இரு நாட்களாக வன்முறை வெடித்துள்ள நிலையில், முப்படைகளுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலகவேண்டும் என அவர்கள் வலியறுத்தினர்.
