Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

நீச்சற் தடாகங்களில் புர்க்கினி – மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு!!

பொது நீச்சற் தடாகங்களில் இஸ்லாமியர்கள் புர்க்கினி முழு ஆடை அணிந்து குளிப்பதற்கான தடையும் எதிர்ப்பும் வலுத்து வருகின்றது.

கிரனோபிள் நகரபிதா எரிக் பியோல் மாநகரசபை நீச்சற் தடாகங்களில் (piscines municipales) இஸ்லாமிய ஆடையான புர்க்கினி போட்டு நீச்சல் செய்வதைத் தடைசெய்யவேண்டும் என ஒரு விவாதத்தை தொடங்கி உள்ளார்.

மதசார்பற்ற நாட்டில் ஒரு பிரிவினர் மட்டும் மாநகரநீச்சற் தடாகங்களில் மத அடையாளங்களை அணிந்தும் பொது விதி மீறல்களையும் செய்வதையும் தடைசெய்ய நினைக்கும் கிரனோபிள் நகரபிதாவைப் பலர் பொது விரோதி, இஸ்லாமிய விரோதி எனவும் பலர் வசைபாட ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் CNEWS இற்காக CSA புள்ளிவிபர நிறுவனம் செய்த கருத்துக் கணிப்பில் 73 சதவீத பிரெஞ்சு மக்கள் பொது நீச்சற்தடாகங்களில் புர்க்கினியைத் தடைசெய்யவேண்டும் எனவே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தை பல அரசியல் வாதிகள் தங்கள் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளடக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்லாமிய வாக்குகளிற்காக இவர்கள் தங்கள் பக்கச்சார்புகளை ஆரம்பித்துள்ளனர்.