Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

டிரம்ப் வீட்டில் 300 ரகசிய ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தியதில் 300க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில் டெனால்டு டிரம்ப் தனது பதவி காலம் நிறைவடையும் நிலையில் அதிபர் மாளிகையில் சில ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்று தனது புளோரிடா மாகாணத்தில் உள்ள சொகுசு பங்களாவில் வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆக.09 ம் தேதியன்று அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டிரம்ப் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றில் சில ஆவணங்கள் தேசிய பாதுகாப்பு, மற்றும் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் டிரம்ப்பிடம் இருந்ததாக , நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.