Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

டாக்டர் பட்டம் வாங்கிய ஐந்தாம் வகுப்பு மாணவர்

பரமக்குடியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் டாக்டர் பட்டம் பெற்றுஉள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பள்ளி ஆசிரியர் தண்டாயுதபாணி மகன் சந்தோஷ் கண்ணா, 10. தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் இவர், தன் 7 வயதில் கார்களின் பெயர், தயாரிப்பு, இன்ஜின் வடிவமைப்பை கூறி அசத்தினார்.

அவரது ஆர்வத்தை அறிந்த பெற்றோர், மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக, கார்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ள வழிகாட்டினர். கடந்த, 2020 ஜூலை 29ல் நம் நாளிதழில் மாணவனை பாராட்டி செய்தி வெளியிடப்பட்டது.’இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் ‘கலைக்களஞ்சிய குழந்தை விருது’ வழங்கப்பட்டது

. கார்களின் செயல்பாடு மட்டுமல்லாது, கந்த சஷ்டி கவசம் துவங்கி, அருணகிரிநாதர் பாடல்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் செயல்பாடுகளை விளக்குதல் என, சிறுவன் அசத்தி வருகிறார்.இவரை பாராட்டி, ‘எங்கஸ்ட் கார் என்சைக்ளோபீடியா இன் த வேர்ல்டு’ என்ற டாக்டர் பட்டத்தை, ‘தி யுனிவர்சல் தமிழ் யுனிவர்சிட்டி’ வழங்கியுள்ளது.மேலும், ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ உட்பட 20க்கும் சாதனை பதிவு சான்றிதழ் பெற்றுள்ளார். மாணவரை பாராட்ட 96005 49759 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.