Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

ஜப்பான் பிரதமருக்கு கொரோனா

-ஜப்பான் பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, 65, சில நாட்களாக சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து லேசான காய்ச்சலும் ஏற்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மாளிகையிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.