Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

குஜராத் – லக்னோ வெற்றிக்கு முக்கியமான 3 காரணங்கள்

பிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே அதிகமானோரால் பார்க்கப்படும் கிரிக்கெட் லீக்கில் இந்த ஆண்டு முதன்முறையாக களமிறங்கிய குஜராத் மற்றும் லக்னோ அணிகள் முத்திரை பதித்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுலும் கேப்டன்களாக இருக்கின்றனர். இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃப் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த 2 அணிகளின் வெற்றிக்கு 2 முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இரண்டு அணிகளிலும் கேப்டன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா 10 போட்டிகளில் 333 ரன்கள் எடுத்திருப்பதுடன், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுல், பேட்டிங்கில் உட்சபட்ச ஃபார்மில் விளையாடிக் கொண்டிருக்கிறார். 11 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 451 ரன்கள் குவித்துள்ளார். இருவரின் ஆட்டமும் அந்த அணிகளுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கின்றன.