Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

ஒன்பது நாட்களில் 20,000 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரை!

இன்று ஒன்பதாவது நாளாக Gironde மாவட்டத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதுவரை 20,800 ஹெக்டேயர்கள் காடு எரிந்து சாம்பலாகியுள்ளன.

இதில் Landiras பிராந்தியத்தின் காட்டுப்பகுதி இதுவரை கட்டுப்பட்டுக்குள் வராமல் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 13,800 ஹெக்டேயர்கள் காடு இங்கு தீக்கிரயாகியுள்ளது. Teste-de-Buch பகுதியில் 7,000 ஹெக்டேயர்கள் தீக்கிரையாகியுள்ளது. குறிப்பாக இங்கு தீகிரையான காடுகள் அனைத்தும் 50 ஆண்டுகால மரங்கள் (1970 ஆம் ஆண்டிற்கு முற்பட்டவை) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் பலத்த போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நேற்று புதன்கிழமை Gironde மாவட்டத்துக்கு பயணித்திருந்த ஜனாதிபதி மக்ரோன், அங்கு கடமையில் ஈடுபட்டுவரும் தீயணைப்பு படையினரை சந்தித்து அவர்களை பாராட்டினர். நன்றியும் தெரிவித்தார். சில நவீன தீயணைப்பு கருவிகளும், சில விமானங்களுக்கும் தீயணைப்பு படையினருக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

அதேவேளை, இன்று ஜூலை 21 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்சின் 12 மாவட்டங்களுக்கு வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.