Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இலோன் மஸ்க்!

SpaceX நிறுவனம் சில ஊழியர்களைப் பதவிநீக்கம் செய்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு இலோன் மஸ்க்கின் நடத்தையைப் பற்றிக் குறைகூறும் கடிதத்தை வெளிப்படையாகப் பகிர்ந்ததால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக The New York Times தெரிவித்தது.

எத்தனை ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை.

திரு மஸ்க் நிறுவனத்தைத் திசை திருப்புவதாகவும் அவமானப்படுத்துவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டது.
மேலும், SpaceX திரு மஸ்க்கின் தனிப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து பிரிந்துவிடவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை வரையறுத்து, அவற்றைச் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நிறுவனத்தின் தலைவர்கள் அனைவரும் சமமான பொறுப்புகளை ஏற்று, ஊழியர்கள் வேலை செய்வதற்கு அதனைச் சிறந்த இடமாக அமைத்துக் கொடுக்கும்படியும் கடிதத்தில் ஊழியர்கள் கோரினர்.