Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

உக்ரேனில் சிக்கியிருக்கும் தானியங்களை வெளியே கொண்டுவரத் தற்காலிகக் கிடங்கு!

உக்ரேனில் சிக்கியிருக்கும் மில்லியன் கணக்கான டன் தானியங்களை வெளியே கொண்டுவர அந்நாட்டின் எல்லையோரம் புதிதாகத் தற்காலிகக் கிடங்குகளைக் கட்டலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யோசனை கூறியிருக்கிறார்.

உக்ரேன் அதன் தானியங்களை ஏற்றுமதி செய்யவும் உலக உணவு நெருக்கடியைச் சமாளிக்கவும் அந்த யோசனை உதவும் என்றார் அவர். உக்ரேனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முடக்கி வைத்திருக்கிறது.

அந்தத் துறைமுகங்களின் கிடங்குகளில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் தேங்கிக்கிடக்கின்றன.
எனவே புதிதாக அறுவடை செய்யும் தானியங்களை வைப்பதற்குத் தன்னிடம் கிடங்குகள் இல்லை என்று உக்ரேன் கூறுகிறது. உலகக் கோதுமையில் 30 விழுக்காட்டை ரஷ்யாவும் உக்ரேனும் வழங்குகின்றன.
கோதுமை மட்டுமல்ல, உக்ரேன் உலகின் ஆகப்பெரிய தாவர சமையல் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றும்கூட. உரம் ஏற்றுமதியில் ரஷ்யா முக்கிய நாடு. அதற்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எனவே போரினால் தானியம், சமையல் எண்ணெய், எரிபொருள், உரம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.