Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

இலங்கையில் 13 பதக்கங்களை பெற்ற சாதனை தமிழ் பெண்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவர் Colombo பல்கலைகழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்ற தமிழ் பெண் இவர் ஆவார். இந்நிகழ்வு மிகுந்த சாதனையாக கருதப்படுகிறது தமிழர் மத்தியில்.

5 ஆண்டுகள் கொண்ட மருத்துவ பீடக்கற்கையில் அவர் வெளிகாட்டிய திறமைகளுக்காக அதாவது 1) MBBS இறுதியாண்டு பரீட்சையில் சிறந்த பெறுபேறு 2) சிகிச்சை மருத்துவத்தில் சிறப்பினை வெளிப்படுத்துயமை 3) அறுவை சிகிச்சையில் சிறப்பான பெறுபேற்றினை பெற்றமை போன்ற 13 விடயங்களுக்காக இவருக்கு இத்தனை பதக்கங்களும் வழங்கப்பட்டன.

தர்ஷிகாவின் தந்தை பாடசாலை அதிபராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். தர்ஷிகாவின் அண்ணன் விஞ்ஞானத்துறையில் முதுமாமணி பட்டம் பெற்றவர். தற்போது ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவரின் தம்பி ஶ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் 3ம் ஆண்டு மருத்துவ பீட மாணவராக உள்ளார். தங்கை உயர்தரத்தில் science கற்று வருகிறார்.

கிராமத்தில் இருந்து Colombo university தெரிவு செய்யப்பட்டார். நகர வாழ்க்கையில் பல சவால்களை எதிர் கொண்டாதாகவும் சிங்கள மொழி தெரியாததால் பெரும் பிரச்சனையாக இருந்தது என்றும் கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது Doctor நியமனம் பெற்றுள்ளார்.