இலங்கையில் நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது 3,500 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வழமையான முறையின் கீழ் ஒரு நாளைக்கு 600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.