சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

தீயில் எரியும் எம்தீவு

ஆழுமை அற்ற அறைகூவல்
காவலரண் தூளாகிய எதிர்முனைப்பு
நேற்று விதைத்த பாவங்கள்
அறுவடையாகும் சிறுபான்மையினரின்
வேதனைக் கண்ணீர்

செத்துப் பிழைக்குது சிக்கல்
நேற்றைய தலைமைகளியின் விக்கல்
இன்று தோற்கடித்து பாடம் புகட்டுது மக்கள்
உரசி உரசி எரியும் மனதிற்கு பாக்கள்

வ௫த்தப்படவில்லை ஏழைமக்கள்
எரித்தும் ௨திர்ந்ததும் ஊழல்
மதங்களை ஆயுதமாக்கி
மனிதத்தை வேரறுத்த வெறுப்பு
தீயாய் எரியுது தீவில்

காணாமல் போன ௨றவுகள்
எரியூட்டப்பட்ட இஸ்லாமிய ௨டலங்கள்
ரசித்து மகிழ்ந்த குற்றத்திற்காக
இறைவனின் பிடியின் இறுக்கம்

ஆட்சியாளர் சிதைத்துவிட்ட
பல சில்லறை விடையங்கள்
கணக்கியலாய் களமிறங்கி
சுழற்றிவிட்ட எதிர்கால தலைமைகளின்
நேரிய பார்வையில் பாவங்கள்
தீயில் எரியும் எம்தீவாய்

அடுப்பு எரியா ஏழ்மை
பால் இல்லா மழலை
௨ழைப்பு இல்லா வறுமை
இவைகளை மாற்றி எழுத
கிழடுகள் சேர்த்த தீமைகள்
தீயிட்டு எம் தீவில் எரியட்டும்

சாம்பலை தட்டி இளையவர்
கூட்டம் மதம் துறந்து
மனிதம் நிலைத்து
மகிழ்வோடு குன்றின் ஒளியாய்
ஒற்றுமை பரவஅரசியல்பாவம்
தீயிட்டு எம் தீவில் எரியட்டும்

நன்றி