சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.08.2022
கவிதை இலக்கம்-186
எங்களை வாழவிடுங்கள்
———————————–
பால் மாறாத பச்சிளங்குழந்தைகளின்
அகிலமெலாம் அவலமாக கேட்கிறதே
பாலியல் ரீதியாக படுகுழியில் தள்ளும்
பாதகர்களின் காமச் சேட்டைகளின்
அகிலம் இகழ்ந்துரைக்க நிலையானதே
பாலைவனத்தில் வாழும் பாதகர்களை
சோலைவனத்திற்கு வர அனுமதியாதே
நஞ்சை விதைக்கின்ற நய வஞ்சகர்களால்
நாளை நடுத்தெருவில் சிரிக்க வைத்து
நடைப் பிணமாக்கி மன அழுத்தத்திலே
விபரீத முடிவில் தற்கொலை செய் நிலையே
நாளை நல்லதோர் உலகம் செய்ய
நாலு பேர் போற்றி புகழுடன் வாழவே
துன்பியல் செய்வோரை தண்டனை பெறவே
நீதி தவறிப்போகாது நல்ல தீர்ப்பு பெறவே
வதை படும் உயிர்களெல்லாம் காத்தருள்வார்கள்