வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.08.22
ஆக்கம்-238
பசி
பசி பட்டினி காரணம் என்ன
புசிக்க எதுவுமில்லை என்ற
விடைக்குத் தேடிய வினாவில்
புதைத்து விதைக்கப்பட்ட
தேடல்கள்

அங்கிருக்கும் மக்கள் இங்கு புலம்பெயர
இங்கிருக்கும் தொழிற்சாலை அங்கு
இடம் பெயர படித்தாலும்,பிடித்தாலும்
வேலை,சம்பளம் இல்லை
பயிரிருந்தும் விளைச்சல் இல்லை

காலநிலை மாற்றம் காவலில்லா சீற்றம்
பசி வந்தால் பத்தும் பறக்கும்
கோயில் இடித்து கட்டிடம் புகுந்து
களவெடுக்கத் தோன்றும்

பசியால் துடிப்பவனும் சுற்றமே
நினைத்துவிட்டால் அவனது
வெற்றிடம் நிரபபி வேதனை
தீர்த்து பணிவால் பற்றிப்
பிடிப்போமே.