வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.08.22
இணைய சீர்கேடுகள்
ஆக்கம் 237
கட்டற்ற சுதந்திரம் காவலில்லாத் தேடல்கள்
இணையத் தந்திரங்கள் ஈடில்லா கேவலங்கள்
திறந்து விடப்பட்ட தேவையற்ற சீர்கேடுகள்
அதிசயங்கள் நிறைந்துவிட்ட ஆச்சரியங்கள்

அன்று இவ்வாறு எதுவுமில்லை
என்றும் அடுத்தவரில் பயமுமில்லை
பழகிய எவரிலும் தாபமுமில்லை
காயமுமில்லை

ஆனாலின்றோ புதுப்புது பயங்கரங்கள்
ஆபாஷங்கள் மறைந்த துயரங்கள்
தெரியாத முகமுடன் நாளும் பொழுதும்
புரியாத உணர்வுடன் சுகமான உரையாடல்

நவீன தொழில்நுட்பம் நன்மை என
நம்பியோர்க்கு உபத்திரமும் ஆகுதே
உணராது துன்புறுத்தும் உயிருள்ள
ஜீவன்கள் உயிரற்ற பிணங்களே