வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.07.22
உலகப் பூமிப் பந்தில் நான்
ஆக்கம்-234
சுட்ட சூரியனில் சுற்றும் பூமிப் பந்தில்
வெட்ட வெளியில் பாதந் தொட்டபோது
பட்ட வேதனை புட்டு வைத்தது

பொட்டுப் பொட்டாய்த் தொப்பழமானது
வெப்ப மிகுதியால் பூரி அப்பளமாய் வீங்கியது
பஞ்சு போன்ற பாதம்

கொஞ்சம் கிட்டப்போய் என்ன வஞ்சமென்று
திட்ட முனைய உடம்பெல்லாம் வேர்த்து
விறுவிறுக்க

சோ எனக் கொட்டிய பெரு மழையோ
சூடான மனதைக் குளிரப் பண்ணி
வெந்த தசையைச் சொந்தமாக்கித்
தடவிக் கொடுத்தது

உலகப் பூமிப் பந்தில் வெப்பம் அதிகரிப்பினும்
விண்ணுக்கு இரக்கமுண்டு மண்ணில்
உதவிக்கரங் கொடுக்கும் மரம் அழிந்தால்
அரக்க குணம் நெருப்புக் குழம்பாய்
சுட்டெரிக்கும்