சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.04.22
கவி ஆக்கம்-56
விழித்திருக்கும் இரவுகள்
தொன்று தொட்டு என்றுந் தோன்றியது
இன்று தான் மனம் நிறைவாய் அரங்கேறியது
தொய்விலாப் போராட்டம் தொடா்ந்திட
சிங்கள அரசு சுக்குநூறாகியது

நசுங்கிய நாடு நாற்றமுடன் பொசுங்கியது
பிதுங்கிய இனமோ விழித்துக் கொண்டது
மொங்கி மொங்கிப் பழி தீா்த்தது
பொங்கி எழுந்து சரித்திரம் ஆனது

வங்கி எல்லாம் முடங்கிச் சுருங்கியது
பசி,பட்டினி,பொருளாதாரம் தூக்கில் தொங்கியது
சிங்கி சொங் சீனத்தவனும் கைவிட்டது

மொங்கி அடித்து மூச்சுவிடாத வெளிநாடு
என்ன செய்யப் போகிறது என ஏங்கித் தவிக்கும்
ஏக்கம் தூக்கமிலாது விழித்திருக்கும் இரவுகள்.