வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ பூமியெனும் சாமி “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 21.04.2022

தாயாகி நின்று எமைத் தாங்கும் பூமி
எமக்கெல்லாம் முதல் சாமி
இவளுக்குள் எத்தனை அதிசயங்கள்
அத்தனையும் வனப்பின் அற்புதங்கள்
பிரபஞ்சத்தின் பேரழகி எழில்மிக்க எழிலி
உயிர்ச்சூழல் கொண்ட உத்தமியாம்
சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்ட வேளை
பற்றோடு சித்திரை22ஐப் புவிநாளாக்கியதே ஐ.நா.வும் !

பிரபஞ்சத்தில் அனைவரும் வாழும் ஒரே வீடு
அனைத்துயிர்களும் தடையின்றி வாழ
இயற்கையின் கொடையாக கிடைத்த பரிசு
உண்ண உணவும் பருக நீரும்
உறவாட உறங்க இடம் தந்தவள் பூமித்தாயே
பூமித்தாய் இல்லையேல் எதுவுமில்லையே உலகில் !

காற்று மாசைத் தடுத்து நெகிழியை ஒழித்து
சுற்றுச்சூழலில் மரங்களை நட்டு
முடிந்தவரை தண்ணீரைச் சேமித்து
பூமியெனும் சாமியை பொக்கிஷத் தாயை
எமைத் தாங்கி நிற்கும் நிலமகளைக்
கண்ணும் கருத்துமாய் காத்து
வளம் சேர்க்க கரம் கொடுப்போம் !