சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்திம் சந்திப்பு
வாரம்: 172
26/04/2022 செவ்வாய்

“சுந்தரி நீ எனதானாய்!”
—————————-
உயிருடன் மெய்யானாய்!
உணர்வுடன் ஒன்றானாய்!
தருவதன் தழையானாய்!
தங்கத்தில் சிலையானாய்!

அமிழ்திலும் இனிதானாய்!
ஆனந்தச் சுருதியானாய்!
பொழுததன் விடியலானாய்!
பொன்தரும் மின்னலானாய்!

குயிலதன் குரலுமானாய்!
குலவிடும் மானுமானாய்!
அழகினில் மயிலுமானாய்!
அன்புக்கு நீயே ஆனாய்!

எழில்தரும் நதியுமானாய்!
ஏறுபோல் மலையுமானாய்!
குளிர்தரும் வாடையானாய்!
கொட்டிடும் பனியுமானாய்!

இதந்தரு மொழியுமானாய்!
இரவென மௌனமானாய்!
சுகம்தரும் தென்றலானாய்!
சுந்தரத் தமிழ் நீ எனதானாய்!