சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 227
27/06/2023 செவ்வாய்
“பசுமை”
———-
மழை முகில் கலைந்தது!
மா மேகம் வெளுத்தது!
தழை எங்கும் துளிர்த்தது!
தரணி பசுமை ஆனது!

இள வேனில் பிறந்தது!
இனிய இளமை ஆனது!
புல வெல்லாம் பூத்தது!
புதிய பசுமை விரிந்தது!

அரும் பவிழ்ந்து விரிந்தது!
அதன் மென்மை தெரிந்தது!
விருப்புத் தேனும் கிடைத்தது!
வியக்கும் பசுமை அமைந்தது!

அழகுப் பதுமை அசைந்தது!
அதிலும் பசுமை தெரிந்தது!
பழகும் விதமும் புரிந்தது!
பசுமை பக்குவ மீந்தது!

வயலும் பசுமை ஆனது!
வானம் வர்ணம் தந்தது!
கயலும் ஓசை இசைத்தது!
காதும் பசுமை யானது!
நன்றி
மதிமகன்